மதுரை: சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கால் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. மேலும், குழந்தைகள் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் வேடமணிந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















