மதுரை: மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டல அலுவலகங்களிலும் புதிய பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது வீடுகளுக்கு புதிய இணைப்புகள் கோரி மனுக்களை அளித்தனர். இதில் மண்டலம் 1-ல் 41 மனுக்களும், மண்டலம் 2-ல் 34 மனுக்களும், மண்டலம் 3-ல் 3 மனுக்களும், மண்டலம் 4-ல் 43 மனுக்களும், மண்டலம் 5-ல் 100 மனுக்களும் என மொத்தம் 221 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 46 மனுக்களுக்கு பணிகளைத் தொடங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் மீது கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், (14.11.2026) (சனிக்கிழமை) அன்றும் சிறப்பு முகாம் நடைபெறும் என்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















