தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பேரணியைத் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், போதையில்லா மாவட்டமாக மாற்ற உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.


















