திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் திண்டுக்கல் மாவட்டம்காவல் கண்காணிப்பாளர் .இளஞ்செழியன் அவர்களின் ஆலோசனையின் படி, காவல் ஆய்வாளர்.ஜெயபாண்டி, காவல் உதவி ஆய்வாளர்கள்.சத்யக்குமா. சிவநாதன், நிலக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்.ஜெசி ரோஸ்லின் மற்றும் உதவி தலைமை ஆசிரியர். நெப்போலியன் ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இன்றைய இளைஞர்கள் போதையினால் ஏற்படும் தீமை மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் முழு கவனம் செலுத்தி, வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி, நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















