திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சின்னகலையமுத்தூரில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பழனி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் எஸ்பி தனிப்படையினர் மற்றும் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல், மேட்டுப்பட்டியை சேர்ந்த தளபதி(25). என்பவரை கைது செய்த விசாரணை மேற்கொண்ட போது கஞ்சா விற்பனை செய்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தளபதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















