திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டியை அடுத்த பச்சைமலையான் கோட்டை, கேத்தயகவுண்டன்பட்டியை சேர்ந்த (30). வயது இளம் பெண்ணின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ் வந்தது இதனை தொடர்ந்து மெசேஜ் அனுப்பிய நபரை கடந்த மாதம் செம்பட்டி வர அழைத்து, இளம் பெண்ணும் அவரது தம்பியும் எச்சரிக்கை செய்த போது அந்த நபருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தான் அனுப்பிய ஆபாச மெசேஜ் யாருக்காவது காட்டினாலோ அல்லது இது குறித்து தெரிவித்தாலோ கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இது தொடர்பாக இளம்பெண் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகநைனார், சார்பு ஆய்வாளர் சேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி ஆபாச மெசேஜ் அனுப்பிய அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த மனோபாலா(35). என்பவரை கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆச்சார் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















