கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசலநத்தம், நரசிம்ம காலனி பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக நுட்புநராக (Lab Technician) பணிபுரிந்து வருவதாகவும், இந்நிலையில், தண்டபாணிக்கு Polo App மூலம் எதிரிகளில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளதாகவும், கடந்த (30.10.2026) அன்று நள்ளிரவு 01.00 மணியளவில், எதிரி தண்டபாணியை ஓசூர், சோமநாதபுரம், VGP லேஅவுட்டில் உள்ள காலி மனையிடத்திற்கு வருமாறு இடத்தின் இருப்பிடத்தை (Location) அனுப்பியுள்ளதாகவும்,
அதன்படி, தண்டபாணி அங்கு சென்றபோது, குற்றவாளி தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து தண்டபாணியைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ₹5,000 பணம் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்றதுடன், அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளதாகவும், இது குறித்து, (01.11.2026) அன்று தண்டபாணி ஓசூர் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூன்று குற்றவாளிகளையும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு


















