மதுரை: மதுரை மாவட்டம், கருப்பாயூரணி சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் திரு. முருகேசன் மற்றும் அவரது பணியாளர்கள், பத்திரப் பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் பத்திர எழுத்தர்கள் மூலமாக லஞ்சம் பெறுவதாக கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இன்று (02.11.2026) கூட்டுத் திடீர் சோதனை (Joint Surprise Check) நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது, கீழ்க்கண்ட நபர்களிடமிருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது விக்னேஸ்வரன் (விற்பனையாளர்) என்பவரிடமிருந்து ரூ. 6,61,700/- திரு. ரவிச்சந்திரன் (நிலத் தரகர்) என்பவரிடமிருந்து ரூ. 10,000/- திரு. மகாராஜா (விவசாயி) என்பவரிடமிருந்து ரூ. 8,000/- இந்த சோதனையின் மூலம், ஆக மொத்தம் ரூ. 6,79,700/- மதிப்பிலான கணக்கில் வராத பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















