திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கோர்ட்டு பிடிவாரண்டை (NBW)மீறி தலைமறைவாக இருந்தவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் தாலுகா போலீசார் மற்றும் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் இன்று (2-ந்தேதி) தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் கொலை மற்றும் போக்சோ வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த நாகராஜ் மற்றும் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















