திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம்) அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் விஜயதசமி மற்றும் ஸ்தாபகர் தின விழா அணிவகுப்பு ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது.
300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திண்டுக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் அருகிலிருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் தங்களின் பிரத்யேக முழு வெள்ளைச் சட்டை, காக்கி நிற முழுக்கால் பேண்ட் மற்றும் கருப்பு தொப்பி அணிந்து, கைகளில் பிரம்புகளுடன் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர்.
ஊர்வலத்தின் முன்னால் பேண்டு வாத்தியக் குழுவினர் சீரான தாள லயத்துடன் இசை முழங்க அணிவகுத்துச் சென்ற காட்சி பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. வழி நெடுகிலும் பொதுமக்கள் மலர் தூவி வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















