தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டல் விடுத்து ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த VINOD SANDEEP SINGH மற்றும் SULTAN MAQBOOL DAIRE ஆகிய இருவரை (28.10.2026) அன்று கைது செய்தனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K.S. பிரவீன் கௌதம், IPS அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இருவரும் கைது செய்யப்பட்டு, (31.10.2026) அன்று தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் வீடியோ அழைப்பு மூலம் கைது செய்யும் சட்ட நடைமுறை இல்லை என்றும், இதுபோன்ற மிரட்டல்களுக்கு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், சைபர் பண மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்க வேண்டும் என்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.



















