கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணபாளையம் கிராமத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூளகிரி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்


















