தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கைப் பேணவும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரா. சிவ பிரசாத், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் உட்கோட்டங்களில் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. கோவில்பட்டி உட்கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. நீல் சர்மா இ.கா.ப அவர்கள் தலைமையிலும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. சுந்தரபாண்டியன் அவர்கள் தலைமையிலும் காவல்துறையினர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.


















