தமிழக காவல்துறையில் நிர்வாக ரீதியாக நான்கு அதிகாரிகளுக்குப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி,1.D.N. ஹரி கிரண் பிரசாத், IPS – இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) நியமிக்கப்பட்டுள்ளார். G. சந்தீஷ், IPS – சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக (DCP – Traffic South) நியமிக்கப்பட்டுள்ளார். K. முத்துக்குமார் – ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக (DCP – Traffic) நியமிக்கப்பட்டுள்ளார்.T. ஈஸ்வரன் – தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை ஆணையராக (DCP – Pallikaranai) காலிப் பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

















