திண்டுக்கல்: திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் மற்றும் தேனி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி. முத்துராஜா ஆகியோர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் கனிம வள முறைகேடு விவகாரத்தில் சென்னை சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு (வழக்கு எண்: 8/26) செய்துள்ளனர்.
அந்த வழக்கின் அடிப்படையில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், டி.எஸ்.பி நாகராஜ் தலைமையில் இன்று காலை முதல் தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மணல் குவாரி முறைகேடு தொடர்பாகப் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா

















