திண்டுக்கல்: திண்டுக்கல், இரண்டல்லபாறையை சேர்ந்த லாரன்ஸ்(36). மனைவி கௌசல்யா(32). இவர் 3 மாதங்களாக காணவில்லை சந்தேகம் அடைந்த கௌசல்யாவின் பெற்றோர்கள் வந்து விசாரித்த போது கணவர் லாரன்ஸ் முறையாக பதில் அளிக்கவில்லை இது குறித்து பெற்றோர்கள் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான போலீசார் லாரன்ஸை வரவழைத்து விசாரணை மேற்கொண்ட போது அவர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து சிறுமலை அடிவாரம் அருகே
ரிங்ரோடு பணிக்காக கொட்டப்பட்டுள்ள மணல் குவியலுக்குள் போட்டுவிட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து ஆய்வாளர் புகழேந்தி, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி ஆகியோர் முன்னிலையில் 3 நாட்களாக தோண்டும் பணி நடைபெற்றது. 30 அடி ஆழத்தில் கவுசல்யாவின் கை எலும்பு, சேலை ஆகியன கிடைத்தது. இதனையடுத்து போலீசார் லாரன்ஸ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா

















