திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரம் நால்ரோடு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், லால்குடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், சமயபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் இணைந்து நடை ரோந்து மேற்கொண்டனர். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து, காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், அப்பகுதியின் சட்டம் ஒழுங்கு நிலவரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களின் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
















