மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களைப் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையில் நடைபெற்ற வாகனத் தணிக்கையின்போது, மதுரை–தேனி மற்றும் தேனி–மதுரை வழித்தடங்களில் சென்ற பேருந்துகளின் ஒலிப்பான்கள் டெசிபல் மீட்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டன. இதில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி எழுப்பிய 20-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களைப் பயன்படுத்தக் கூடாது என ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















