திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு உப்பாற்று ஓடை அருகே மோட்டார் சைக்கிள் தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில், செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் மணிகண்டன் (33). உயிரிழந்தார். ஹைதராபாத்தில் புதிய வேலைக்குச் சேர இருந்த மணிகண்டன், திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்கிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா

















