திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாழையூத்து அரசு மேல்நிலை பள்ளியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கத்தை தடுக்கும் நோக்கில், சாமிநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் மாணவர்களிடம் போதைப்பொருட்களால் ஏற்படும் உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள், கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையில் ஏற்படும் சீரழிவுகள் குறித்து ஆய்வாளர் முருகேஸ்வரி எடுத்துரைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா

















