
மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மதுரை மாவட்டம், சமயநல்லூர், தேனூர் ரோடு, மகாலட்சுமி நகரில் வசிக்கும், இறந்த சூர்யா என்ற குட்டிசாக்கு என்பவரின் மனைவியும், (23). வயதுடையவருமான ஜான்சி என்ற புகார்தாரர் அளித்த புகாரில் கடந்த (01.11.2026) அன்று சுமார் 23:30 மணியளவில் பழைய கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகில், அடையாளம் தெரியாத நபர்கள் அவரது கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துவிட்டார். மேற்படி புகாரின் அடிப்படையில் சமயநல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள், கைவிரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் சமயநல்லூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு அருகில் உள்ள இடங்களிலிருந்து சிசிடிவி (CCTV) பதிவுகள் சேகரித்து தீவிரமாக ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, 1) அஜய் (26). த/பெ. சுரேஷ், மேற்கு தெரு, பன்னியான், செக்கானூரணி, 2) விஷ்ணு (24). த/பெ. தேவேந்திரன், மீன்பண்ணை தெரு, சத்தியமூர்த்தி நகர், மதுரை. 3) செல்வகுமார் (25). த/பெ. சக்திவேல், ஊர்மெச்சிகுளம். 4) அஸ்வின் (23). த/பெ. சந்தானம், எம்ஜிஆர் நகர், சத்தியமூர்த்தி நகர், மதுரை. 5) சந்துரு (எ) குட்டிமணி (20). காந்தி நகர், சமயநல்லூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்ததில், மேற்படி இறந்த சூர்யா 4-வது குற்றவாளி அஸ்வின் மற்றும் அவனது நண்பர்களை அடிக்கடி தகாத வார்த்தையால் திட்டி அடித்ததால் அஸ்வினுக்கும் சூர்யாவிற்கும் இடையில் குடிபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறில் கொலை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர். மேற்படி சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தேவநாதன் அவர்கள் பாராட்டியதோடு, மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்

















