திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சொத்து தகராறு காரணமாக தளவாய் தேவர் என்பவரை அவரது பேரன் கிருஷ்ணராஜா அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். (01.11.2026) அன்று காலை 6.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் தளவாய் தேவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டனர். கொலை வழக்கில் கிருஷ்ணராஜாவைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



















