திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் போதைப்பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை – ஒரே நாளில் இரண்டு வழக்குகளில் சுமார் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, IPS., அவர்களின் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று (25.08.2026), அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த செந்தில் (42). ஆலங்குளம், நெட்டூரைச் சேர்ந்த கருப்பசாமி (35). திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (20). மற்றும் A. மருதப்பபுரத்தைச் சேர்ந்த செல்வம் (20) ஆகிய நால்வரையும் சோதனை செய்தனர்.
அப்போது, அவர்களிடம் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 22 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நால்வரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போல், இராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கால்கரை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டம், கால்கரையைச் சேர்ந்த முருகன் (24), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு (22). மற்றும் கணேஷ் அரவிந்த் (21) ஆகிய மூவரையும் சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 6 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து இராதாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் மூலம், இன்று ஒரே நாளில் அம்பாசமுத்திரம் மற்றும் இராதாபுரம் காவல் நிலைய சரகங்களில் மொத்தம் சுமார் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 7 நபர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்க, காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, IPS., அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி



















