திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., உத்தரவின்படி,மாவட்டம் முழுவதும் சரித்திரப் பதிவேடு (HS) குற்றவாளிகள் மீது சிறப்பு கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு நடவடிக்கையில், மாவட்ட பதிவில் உள்ள மொத்தம் 1,396 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளில், 682 பேரை இதற்கென நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு சரிப்பார்த்தனர்.
சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நிறுத்தவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும், இது போன்ற சிறப்பு கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடரும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















