திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., (28.07.2026) அன்று வெள்ளாளன்குளம் சோதனைச் சாவடி (Check Post) மற்றும் வெள்ளாளன்குளம் பிக்கெட்டிங் பாதுகாப்பு பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன சோதனை நடைமுறைகள் மற்றும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு, பாதுகாப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த தேவையான அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து, சீதபற்பநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று காவல் நிலையத்தின் நிர்வாக செயல்பாடுகள், வழக்குகளின் பராமரிப்பு, பதிவேடுகள், மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் காவல் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும், நிலுவையில் உள்ள பிடியாணைகள் (NBW) விரைவாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















