திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை இணைந்து , (31.07.2026) அன்று சுத்தமல்லி, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் “மாண்புமிகு மாணவர்கள் – 3.30” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான மனநல மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி நடத்தியது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது, மாணவர்கள் போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாமல், அவற்றால் ஏற்படும் தீமைகள் பற்றி உணர்ந்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கல்வி மற்றும் விளையாட்டில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு, ஒழுக்கம், கட்டுப்பாடு, சமூகப் பொறுப்புணர்வுடன் வாழ்க்கையில் உயர்ந்த இலக்குகளை அடைந்து, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களை ஊக்குவித்தார். மேலும் பயிற்சியின்போது, மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு, சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்தும் முறை ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், காவல்துறையினர், மற்றும் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















