மதுரை: நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினர் மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் தீவிர நடை ரோந்து (Foot Patrolling) பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


















