மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராமத்தில் தூய்மை காவலர் திருமதி சசிகலா என்பவர் ஊராட்சி செயலாளர் ரூபா என்பவர் மீது கொடுத்த புகாரின் பேரில், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண்: 355/2026-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இது தொடர்பாக ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் மற்றொரு வழக்கு கொட்டாம்பட்டி காவல் நிலைய குற்ற எண்: 358/2026-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவோ அல்லது முழுமையாக முடித்து வைக்கப்பட்டுவிட்டதாகவோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின்றன. இவ்வழக்குகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை.காவல் துறையினரால் சட்டப்படி புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















