மதுரை: பரமக்குடிக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு இடத்திற்கு அஞ்சலி செலுத்த செல்லும் வாகனங்கள் செல்ல வேண்டிய வழித்தடங்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, திருச்சுழி, பார்த்திபனூர் வழியாக பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். விருதுநகர் மாவட்டம்: விருதுநகர் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, திருச்சுழி, பார்த்திபனூர் வழியாக பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம். புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
குறிப்பு: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளிற்கு அஞ்சலி செலுத்த சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. II) அரசு பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்வதற்கான வழித்தடங்கள். மதுரையில் இருந்து இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் செல்லும் வாகனங்கள். அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், அனைத்து சரக்கு வாகனங்கள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் மதுரையிலிருந்து கருப்பாயூரணி நான்கு வழிச்சாலை சந்திப்பு, கருப்பாயூரணி, வரிச்சியூர், பூவந்தி, படமாத்தூர் சந்திப்பு, சிவகங்கை, காளையார்கோவில், R.S.மங்களம், தேவிபட்டினம் வழியாக இராமநாதபுரம் சென்றடைய வேண்டும். இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள்: மேற்கண்ட வழியாக மதுரை வரவேண்டும்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...