கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் STRR ரோடு அருகே வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கடத்தப்பட்ட சுமார் 02 யூனிட் M-Sand இருந்தது. அனுமதியின்றி M-Sand கடத்திய குற்றவாளியை கைது செய்து M-Sand கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















