கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்கள் தலைமையில், (06.09.2026) கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. வேலுமணி (தலைமையிடம்), துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, காவல்துறையில் பணியாற்றியபோது உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் ஆளினர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அறிவுரைகளை வழங்கினார். மேலும், காவலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு மற்றும் திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெற்ற காவல் ஆளினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி முழுவதும் உற்சாகமான மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















