திண்டுக்கல்: திண்டுக்கல் , தாடிக்கொம்பு அம்மன் நகரை சேர்ந்த ராமசாமி மகள் கார்த்திகை தேவி(17). இவர் +2 படித்து வந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி கார்த்திகை தேவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு கூர் ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















