திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானல் பூம்பாறை பகுதியை சேர்ந்த ராஜா, இவரின் தந்தை இறந்த நிலையில் வீட்டு வரி ரசீதை தனது பெயரில் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தபோது பூம்பாறை ஊராட்சி மன்ற செயலர் முருகேசன்(58) மற்றும் கணினி ஆப்ரேட்டர் ராஜா சண்முகவேல்(34). இருவரும் ரூ.5000 லஞ்சம் கேட்டனர். ராஜா ரூ.5000 லஞ்சம் கொடுக்கும்போது மறைந்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு DSP. நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் ரூபாகீதா ராணி, பழனிச்சாமி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















