திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பழனி துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















