சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சோதனையில் தேவகோட்டை ஒத்தக்கடை அருகே வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஜியாம்சுந்தர்(41). என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள் (Ganesh Pocket, Cool lip pocket) கைப்பற்றப்பட்டது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா இ.கா.ப., சோதனையில் ஈடுபட்ட தேவகோட்டை நகர் போலீசாரை வெகுவாகப் பாராட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















