மதுரை: மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் மூலம் பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று (02.09.2026) திடீர் கூட்டுச் சோதனை நடைபெற்றது. சோதனையில் கணக்கில் வராத ரூ.1,80,000 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இடைத்தரகர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமை கோரப்படாத பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















