திண்டுக்கல்: திண்டுக்கல், முருகபவனம் இந்திராநகரை சேர்ந்த அருண்குமார்(30). இவர் குடும்பத்துடன் விசேஷத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து காரில் கிளம்பும்போது காரின் மேல்புறத்தில் 50 பவுன் இருந்த நகை பெட்டியை வைத்து மறந்து காரை எடுத்துச் சென்றார் கார் பழனி பைபாஸ் அருகே செல்லும்போது நகைப்பெட்டி மேற்புறத்தில் இருந்து கீழே விழுந்தது. விசேஷ வீட்டில் நகை பெட்டி காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்து நகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து நகர் DSP. கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து நகைப்பெட்டியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். நகைப்பெட்டியை பெற்ற அவர்கள் குடும்பத்துடன் கண்ணீர் மல்க காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















