மதுரை: மதுரை மாவட்டம்(11.09.2026) அன்று பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் நிகழ்வை முன்னிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் பயணம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில், இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கொண்ட 100 நபர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நினைவு தினத்திற்கு செல்லும் போது சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுதல், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பயணம் மேற்கொள்ளுதல், காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், நினைவு தின நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையுடன் முழு ஒத்துழைப்பு வழங்கி, அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் நிகழ்வில் பங்கேற்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















