இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், இ.கா.ப., ஆகியோர் தலைமையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நினைவு தின நிகழ்வை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குமுறை, காவல்துறையினரின் பாதுகாப்புப் பணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















