மதுரை: மதுரை மாவட்டம், விளாச்சேரி முனியாண்டிபுரம் தென்கால் கண்மாய் பகுதியில் தண்ணீர் இல்லாததால் முள் செடிகள் மற்றும் காய்ந்த புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அப்பகுதியில் திடீரென தீப்பற்றி மளமளவென பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
இதே பகுதியில் இந்த மாதத்தில் மட்டும் 3 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்துகள் தொடர்வதால் குடியிருப்போர் அச்சமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும், அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ளவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















