மதுரை: சோழவந்தானில் பேருந்துக்காக 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பின்னர் வந்த ஒரே பேருந்தில் கடும் நெரிசலுக்கு இடையே ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் மாலை 6 மணி முதல் மாணவர்கள் காத்திருந்த நிலையில், இரவு 8 மணிக்கும் பேருந்து வராததால் சிலர் ஆட்டோக்களில் கல்லூரிக்கு சென்றனர். பின்னர் வந்த பேருந்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நெரிசலில் சிக்கி, சிலர் படிகளில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
சோழவந்தான் பகுதியில் பேருந்து சேவையை அதிகரித்து, பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் பேருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் விடுமுறை மற்றும் விழா நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















