கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம். சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜுஜுவாடி சோதனை சாவடிக்கு கடந்த (29.08.2026)-ம் தேதி பெங்களூரில் இருந்து தனியார் பேருந்து மூலம் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் வெள்ளை நிறத்தில் பூப்போட்ட சட்டை அணிந்த நபர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.இளவரசன் மற்றும் அவரது குழுவினர் மேற்படி ஜுஜுவாடி சோதனை சாவடியில் தொடர் வாகன சோதனை மேற்கொண்ட போது, அப்போது TN 42 AT 6596 என்ற பதிவு கொண்ட SGT Travels ஆம்னி பேருந்து தடுத்து சோதனை செய்தனர்.
அவ்வாறு சோதனை செய்தபோது பேருந்தின் லக்கேஜ் வைக்கும் பகுதியில் இருந்த கருப்பு மற்றும் சிவப்பு நிற தோல் பையை சோதனை செய்ததில், அதில் தலா சுமார் 1 கிலோ எடையுள்ள 6 பொட்டலங்களாக சுமார் 6 கோடி மதிப்பிலான மொத்தம் 6 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மேற்கண்ட பேருந்தில் பயணித்து வந்த திருவள்ளூர் மாவட்டம் அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் கலெக்டர் நகர் 2வது தெருவை சேர்ந்த ரகு (32). த/பெ.திரு செல்வம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















