கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அண்ணா நகரைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், காந்திநகர், பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள ஹேப்பி ஹோம் பி.ஜி.யில் தங்கி, ஓசூரில் அமைந்துள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் MDV வெல்ட் ஷாப்பில் எக்ஸிக்யூட்டிவாக கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த (26.08.2026) அன்று மாலை சுமார் 04.30 மணியளவில், சிவபிரசாத் தனது இருசக்கர வாகனத்தை நிறுவனத்தின் முன்புற பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றுள்ளார்.
பின்னர், (27.08.2026) அன்று அதிகாலை சுமார் 01.00 மணியளவில் பணிமுறை (ஷிப்ட்) முடிந்து வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது. இது குறித்து அப்பகுதியில் விசாரித்தும் வாகனம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், சிவபிரசாத் காவல் நிலையம் ஆஜராகி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















