கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மாருதி நகரில் உள்ள VRK ஹவுஸைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் , இவர் ஓசூர் உழவர் சந்தையின் பின்புறம் “VRK எண்டர்பிரைசஸ்” என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் ஹோல்சேல் விற்பனை கடை நடத்தி வருவதாகவும் , கடந்த (26.08.2026) ஆம் தேதி காலை சுமார் 11.00 மணியளவில், அவரது கடையின் ஷட்டரை பூட்டாமல் கண்ணாடி கதவை மட்டும் பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மதியம் சுமார் 12.10 மணியளவில் கடைக்கு திரும்பி வந்து பார்த்தபோது, கடையின் கண்ணாடி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த பணம் காணவில்லை என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து பின்னர், ரமேஷ் என்பவர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















