மதுரை: மதுரை மாவட்டம், T.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எரிச்சநத்தம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக கந்தகுமார் (23), பவுன்ராஜ் (23) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















