மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் அவர்களின் தலைமையில், இன்று (21.08.2026) ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (Ultra College of Arts & Science), போதைப்பொருள் தடுப்புக்குழு கூட்டம் (Anti-Drug Club Meeting) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், “போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்” குறித்த விரிவான விழிப்புணர்வு மாணவ மாணவிகளிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊமச்சிகுளம் உட்கோட்ட துணைக்கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு.நாகராஜன், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களும் முன்னிலை வகித்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளரிப்பட்டி கிராமம் பாரி திருமண மண்டபத்தில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் அவர்களின் தலைமையில், வெள்ளரிப்பட்டி கிராம மக்களுடன் கிராம விழிப்புணர்வுக் குழு கூட்டம் (Village Vigilance Committee Meeting) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், “பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டு, குறைகளுக்கு தகுந்த விளக்கம் அளிக்கப்பட்டது”. இதில் மேலூர் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார் மற்றும் மேலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு உரையாற்றி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















