மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்காலில் இருந்து கொடிமங்கலம் சொல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் பங்கு உள்ளது இந்த பங்கில், கொடூர ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை – மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் திடீரென பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்து கைகளில் பெரிய கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை ஏந்தியவாறு, பணியில் இருந்த ஊழியர் திருமுருகனை கடுமையாக மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது , அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ,
தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, தப்பியோடிய மர்ம தீவிரமாகத் தேடி வருகின்றனர். ரூபாய் 35 ஆயிரம் பணம் பறித்து சென்றதாக பெட்ரோல் பங்க் தரப்பில் கூறப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















