மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை சார்பில், காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், “நம்ம மதுரை நம்ம போலீஸ்” இயக்கத்தின் கீழ் 5 கி.மீ. தூர காவலர் வீர வணக்க நினைவு மாரத்தான் போட்டி (18.10.2026) அன்று நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை 6 மணிக்குத் தொடங்கிய போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, தாமும் பங்கேற்றார். ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி ஐயர் பங்களா வழியாக மீண்டும் மைதானத்தை வந்தடையும் வகையில் போட்டி நடைபெற்றது. இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















