மதுரை: மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைகை பெரியார் நகர் பகுதியில், (16.10.2026) அன்று பிற்பகல் 2.45 மணியளவில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் மயில் மற்றும் சிறப்புத் தனிப்படையைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அருண் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்ததாக குருசாமி (28). ஆனந்தகுமார் (32). ஆண்டிமுருகன் (29). ஆகிய மூவரையும் பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா, 3 ஆண்ட்ராய்டு செல்போன்கள், 4 ஆயுதங்கள் மற்றும் TN 59 DW 6720 என்ற பதிவு எண் கொண்ட ஸ்பிளெண்டர் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















