திண்டுக்கல்: திண்டுக்கல் மோளப்பாடியூரை சேர்ந்த வடிவேல் (42). என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை வடக்கு ரத வீதியில் நிறுத்தி வைத்திருந்ததை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா நகர் குற்றத்தடுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம் சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு அடியனூத்து, J.J.காலனியை சேர்ந்த அசாருதீன்(29)-ஐ கைது செய்து இருசக்கர வாகனத்தை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















